Tuesday, September 7, 2010

கல்கி என்ற சரித்திரமே!!!

சமுதாயச் சிற்பி பிற‌ந்த தினம
சரித்திர நாயகன் மண்ணில் உதித்ததினம்
வாழ்பவனையே நினைக்க நேரமில்லை
வாழ்ந்த்தவனை நினைப்பது சாதாரணமா
சிவகாமியின் சபதத்தை வென்றவரே
பார்த்திபன் கனவில் உதித்தவரே
பொன்னியின் செல்வனை பெற்றவரே
உன் பொற்பாதம் தொட வாய்ப்பிலை
ஆனால் உன் எழுத்தை தொடும் பாக்கியம் பெற்றேன்
ச‌ரித்திரத்தைப் புகழ நான் சரித்திரம் தெரிந்தவனில்லை.

கல்கியின் பிறந்த நாள்

இன்று பலரிடையே நூல் வசிக்கும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விலட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.அதனால் நாம் பலவற்றை இழந்துவிட்டோம். இப்பொழுது கதைக்கு வருவோம். நாளை கல்கி அவர்கலின்
பிறந்த நாள். அவரின் பிறந்த நாளில் இப் பதிவை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.அவருடைய சிவகாமியின் சபதம் என்ற நூலைப் படித்த போது ப்பல்லவர்களைப்பற்றியும்,
பொன்னியின் செல்வன் படித்தபோது சோழர்களைப்பற்றியும் அறிந்து கொண்டேன் என்பதை விட அவர்கள் காலத்திற்கே சென்று வந்தேன் என்றாள் அது மிகை அல்ல.இதை படித்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

கல்கி வாழ்க!
அவர் புகழ் ஓங்குக!

Tuesday, July 27, 2010

என் சந்தோசக் காற்றே




என் வ்குப்பில் ஒரு நாள் மாசுபடுதல் பற்றி நடத்தினேன். அவர்களிடம் மாசுபடுதளை தடுப்பதற்காக கடைக்குச் சென்றால் துணிப்பைக்ளை எடுத்துச் செல்லவேண்டும் என்றும் ,ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்றும் ப்ளாஸ்டிக்கின் தீமைகள் பற்றியும் கூறினேன்.வகுப்பு முடியும் போதுகூறினேன்,நாளை அனைவரும் நோட் ம்ற்றும் புத்தகத்திற்கு அட்டை போடவேண்டும் என்று,அடுத்த நாள் ஒரு ஆச்சரியம் நடந்தது அனைவரும் நாளிதழ்களை அட்டையாக அணிந்திருந்தனர்.அதற்கு நான் கேட்டேன் ஏண்டா ஒரு ப்ரவுன் சீட் கூட போட முடியாதா என்று .அவர்கள் கூறினர் நீங்கதான மிஸ் சொன்னீங்க ப்ளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று . அன்று முதன்முதலாக என் சந்தோசக்காற்றை சுவாசித்தேன்.

Friday, July 23, 2010

என் பெயர் கார்த்திகா



என் பெயர் கார்த்திகா,
இது என் முதல் பதிவு.இதில் அதிகமாக நன்றி கூற விருமபுவது என் அண்ணனுக்குத் தான்.ஏனெனில் இந்த உலகத்தை அறிமுகம் செய்ததே என் அண்ணனே.இதில் என் கணினிப் பயணத்தை கூற விழைகிறேன்.எனக்கும் எந்தக் கணிக்கும் எந்த அளவு தொடர்பு என்பதை தாங்கள் தான் கூற வெண்டும். நான் தொலை தூரக்கல்வியில் கணிதம் பயில்கிறேன். அதில் ஒரு பாடம்/ அதற்காக என் வீட்டில் கணினி வாங்கிக்கொடுத்தார்கள் நான் வசதியான பெண் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனாலும் என் அம்மாவின் தன்னம்பிக்கையும், என் அப்பாவின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யும் எண்ணமும் பணவசதியையும் விட அதிக அளவு வசதி வாய்ப்பை எனக்கு நல்கியது. வசதியானவளா? இல்லையா? என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இதற்கு பதில் ஆ..ஆ.. தெரியலையே.